பொதுநலவாய மாநாட்டுக்கான விசேட சொகுசு பஸ் விபத்துக்குள்ளானது - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, November 09, 2013

பொதுநலவாய மாநாட்டுக்கான விசேட சொகுசு பஸ் விபத்துக்குள்ளானது


பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரநிதிகளை ஏற்றிச் செல்ல தயார் செய்யப்பட்டிருந்த சொகுசு பஸ் வண்டி இன்று முற்பகல் விபத்துக்குள்ளானதாக தெரியவருகிறது. 
திஸ்ஸமஹாராமவில் இருந்து மத்தள மகிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தை நோக்கி சென்ற இந்த பஸ் திஸ்ஸமஹாராம பன்னகமுவ சந்தியில் இன்று முற்பகல் இராணுவ ட்ரக் வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
CHOGM 4207 என்ற இலக்கம் கொண்ட இந்த சொகுசு பஸ், யூ.ஹ.23647 என்ற இராணுவ ட்ரக் வண்டியுடன் மோதியுள்ளது. இந்த சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
திஸ்ஸமாஹாராம பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எவ்வாறாயினும் இதற்கு முன்னர் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ளும் அரச தலைவர்களை ஏற்றிச் செல்வதற்காக இறக்குமதி செய்யப்பட்ட 54, S400 ரக பென்ஸ் கார்களில் மூன்று விபத்துக்கு உள்ளாகி பயன்படுத்த முடியாதளவில் சேதமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post Top Ad