தெருக்கள் எங்கும் பிணக் குவியலும் , பசியால் வாடும் பிலிப்பைன்ஸ் மக்களின் அழுகுரல்களும் (வீடியோ இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, November 11, 2013

தெருக்கள் எங்கும் பிணக் குவியலும் , பசியால் வாடும் பிலிப்பைன்ஸ் மக்களின் அழுகுரல்களும் (வீடியோ இணைப்பு)பிலிப்பைன்ஸ் நாட்டையே புரட்டி போட்ட ஹையான் புயலுக்கு 10,000 பேர் பலியாகி உள்ளனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய பகுதியில் உள்ள சமர், லிஸ்தே தீவுகளை ஹையான் என்ற புயல் தாக்கியது.

அப்போது மணிக்கு 313 முதல் 378 கிலோ மீற்றர் வேகத்தில் சூறைக்காற்று வீசியதுடன், கடலில் 20 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழுந்தன.
இதனை தொடர்ந்து பலத்த மழையும் கொட்டியதால், நாடே உருக்குலைந்து போனது.
புயல் கரையை கடந்து சென்ற வழியில் 80 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் முழுமையாக அழிந்துவிட்டன.
இந்த புயலின் தாக்குதலுக்கு 10 ஆயிரம் பேருக்கு மேல் பலியாகி உள்ளனர்.
இவர்களின் பிணங்கள் தெருக்களிலும், ரோட்டோரங்களிலும் சிதறி கிடக்கின்றன.
கடல் நீர் ஊருக்குள் புகுந்ததாலும், மழை வெள்ளம் பெருக்கெடுத்ததாலும் அதில் சிக்கி பலர் இறந்தனர், அவர்களின் உடல்கள் தண்ணீரில் மிதக்கின்றன.
அவற்றை அப்புறப்படுத்தும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
சில இடங்களுக்கு மீட்பு படையினர் செல்ல முடியாததால் பிணங்கள் அப்புறப்படுத்த முடியாமல் அழுகி துர்நாற்றம் வீசுகின்றது.
சுமார் 50 லட்சம் பேர் உறவினர்கள், உடைமைகளை இழந்து தவிக்கின்றனர்.
உறவினர்களை தேடி தெருக்களில் அலைகின்றனர், எங்கு பார்த்தாலும் அழுகுரலும், சோகமும் தான் நிறைந்திருக்கிறது.
இது ஒருபுறம் இருக்க உயிர் பிழைத்தோர் சாப்பிட உணவும், குடிக்க தண்ணீரும் இன்றி பரிதவிக்கின்றனர்.
இவற்றை பெறுவதற்காக தக்லோன் விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ள முகாமில் நீண்ட கியூ வரிசையில் காத்து நிற்கின்றனர்.
உணவு கட்டுப்பாடு நிலை தொடர்ந்து நீடித்தால் பசியில் மேலும் பலர் மடியும் சூழ்நிலை உருவாகும் வாய்ப்பு உள்ளது.
இதற்கிடையே மீட்பு பணிக்கு உதவ அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் முன்வந்துள்ளன.
இதுகுறித்து அதிபர் ஒபாமா விடுத்துள்ள அறிக்கையில் புயல் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துள்ளார்.
பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு உதவ ஐரோப்பிய யூனியனும் முன் வந்துள்ளது.
இந்த தகவலை அதன் மனிதாபிமான உதவி கமிஷனர் கிறிஸ்மாலினா ஜியர் ஜிவா தெரிவித்துள்ளார்.
No comments:

Post Top Ad