வங்காள தேசத்தில் ஷேக்ஹசீனா மந்திரி சபை ராஜினாமா - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, November 12, 2013

வங்காள தேசத்தில் ஷேக்ஹசீனா மந்திரி சபை ராஜினாமா


வங்காள தேசத்தில் வருகிற ஜனவரி மாதம் பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. எனவே, பிரதமர் ஷேக்ஹசீனா தலைமையிலான மந்திரி சபை ராஜினாமா செய்து விட்டு நடுநிலையாக நியாயமான முறையில் தேர்தல் நடத்த பிரதான எதிர்க்கட்சியான வங்காள தேச தேசியவாத கட்சி வலியுறுத்தியது.


இதற்கு ஷேக்ஹசீனா அரசு மறுத்ததால் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்துகின்றன. அதனால் வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதற்கிடையே நாளை (12–ந்தேதி) முதல் 4 நாட்கள் தேசிய அளவிளான முழு அடைப்பு நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதை தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் நிபந்தனைக்கு ஷேக்ஹசீனா அரசு பணிந்தது. இன்று அவரது அமைச்சரவை ராஜினாமா செய்து விட்டு பதவி விலகியது.

No comments:

Post Top Ad