எனது சுயவிருப்பத்தில்தான் பதவியை இராஜினாமா செய்தேன் ; சிராஸ் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, November 09, 2013

எனது சுயவிருப்பத்தில்தான் பதவியை இராஜினாமா செய்தேன் ; சிராஸ்

(nf)
தனது சுயவிருப்பின் பேரிலேயே கல்முனை மாநகர மேயர் பதவியை இராஜினாமா செய்ததாக முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிப் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரிடம் கொழும்பில் வைத்து இராஜினாமா கடிதத்தை நேற்று கையளித்த பின்னர், ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே சிராஸ் மீராசாஹிப் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியில் மேயராக 45 நாட்களுக்குள் தெரிவாகியதாக குறிப்பிட்ட அவர், இரண்டு வருடங்களின் பின்னர் நிசாம் காரியப்பரிடம் அந்த பதவியை கையளிக்குமாறு தலைவர் தன்னிடம் கூறியிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒப்பந்தங்கள் எதுவும் கைச்சாத்திடப்படவில்லை எனவும், வெறும் வார்த்தைகளின் அடிப்படையிலான இணக்கப்பாடே காணப்பட்டதாகவும் சிராஸ் மீராசாஹிப் குறிப்பிட்டுள்ளார்.
கட்சிக்குள் பிரச்சினைகள் காணப்படுதாகவும், தன்னை கட்சியில் இருந்து நீக்குவதற்கு சிலர் செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் நிசாம் காரியப்பர் ஆகியோரும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post Top Ad