கா-குடி ஜம்மியதுல் உலமா சபைக்கு அமானா இஸ்லாமிய வங்கி குளிரூட்டி அன்பளிப்பு (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, November 09, 2013

கா-குடி ஜம்மியதுல் உலமா சபைக்கு அமானா இஸ்லாமிய வங்கி குளிரூட்டி அன்பளிப்பு (படங்கள் இணைப்பு)(பழுலுல்லாஹ் பர்ஹான்)

அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் கீழ் இயங்கும் காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபை காத்தான்குடி அமானா இஸ்லாமிய வங்கியிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க    கா-குடி ஜம்மியதுல் உலமா சபைக்கு 85000 ரூபாய் பெறுமதியான குளிரூட்டி (ஏ.சி.) இயந்திரம் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.


அன்பளிப்பு செய்யப்பட்ட குளிரூட்டி இயந்திரத்தை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு 09-11-2013 இன்று சனிக்கிழமை இரவு இஷா தொழுகையின் பின் கா-குடி ஜம்மியதுல் உலமா சபை காரியாலயத்தில் இடம்பெற்றது.

இதன் போது அன்பளிப்பு செய்யப்பட்ட குளிரூட்டி இயந்திரம் காத்தான்குடி அமானா இஸ்லாமிய வங்கி முகாமையாளர் ஏ.எல்.முஹம்மட் அலிääஉதவி முகாமையாளர் எம்.பி.எம்.பவுஸர் ஆகியோரினால் கா-குடி  ஜம்மியதுல் உலமா சபை தலைவர் மௌலவி எஸ்.எம்.அலியார் பலாஹியிடம் கையளிக்கப்பட்டது.

காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபையின் தலைவரும்ää  காதி நீதிபதியுமான மௌலவி எஸ்.எம்.அலியார் (பலாஹி) தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபையின் ஆயூட்காலத் தலைவர் மௌலவி முஸ்தபா (பஹ்ஜி)ää மூத்த உலமா மௌலவி முஸ்தபா (பஹ்ஜி)ää ஜம்மியதுல் உலமா சபையின் உப தலைவர் அஷ்ஷேய்க் எம்.சி.எம்.றிஸ்வான் (மதனி)ää அதன் செயலாளர் எம்.எச்.ஜிப்ரி மதனி ääநிர்வாக செயலாளர் அஷ்ஷெய்க் அமானிääஅதன் பொருளாளர் ஏ.எம்.அப்துல் காதர் (பலாஹி)ää உட்பட காத்தான்குடி அமானா இஸ்லாமிய வங்கி முகாமையாளர் ஏ.எல்.முஹம்மட் அலிääஉதவி முகாமையாளர் எம்.பி.எம்.பவுஸர்ääவங்கி உத்தியோகத்தர்களானஎம்.எப்.எம்.அஸ்மிääஎம்.ஐ.எம்.றிகாஸ்ää எம்.எப்.எம்.சுல்பி  ääகாத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபை உலமாக்கள் ääஊடகவியலாளர்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
No comments:

Post Top Ad