தி/மூ/ஆயிஸா வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டும் நிகழ்வு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, November 13, 2013

தி/மூ/ஆயிஸா வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டும் நிகழ்வு


ஆசிரியர் தின விழாவும் , புலமைப் பரிசில் பரீட்சையில் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களையும் , கற்பித்த ஆசிரியையும் பாராட்டும் நிகழ்வு

இந்நிகழ்வு 2013-11-12 நேற்று மாலை அதிபர் அல்ஹாஜ் ஜெயினுதீன் முஹம்மது மாகிர் தலைமையில் நடைபெற்றது.


இந்நிகழ்வின் பிரதம விருந்தினர்களாக மூதூர் பிரதி வலயக் கல்வி பணிப்பாளர் அல்ஹாஜ் ஏ.ஆர்.எம்.பாறுக் அவர்கள் மாணவர்களுக்கான கலந்துகொண்டு சிறப்பித்ததோடு ,  மாணவர்களுக்கு சான்றிதல்களையும் , ஆசிரியாகளுக்கான பரிசில்களையும் வழங்கி வைத்தார்.

கௌரவ விருந்தினராக  பிரதம பிரதிச் செயலாளர் எம்.சீ.எம்.சரீப் கலந்து கொண்டு உரையாற்றியதேடு பரிசில்களையும் வழங்கி வைத்தார். அத்தோடு கிழக்கு மாகாணத்தின் இணைப்புச் செயலாளரும் சட்டத் தரணியுமாகிய அல்ஹாஜ் ஜே.எம்.லாகீர் ,திட்டமிடல் உதவி பணிப்பாளர் பி.அறபாத் ,உதவிக் கல்வி பணிப்பாளர் யு.எம்.லாபிர், ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்வு சிறப்பாக இடம்பெற பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்களான எம்.ஐ.சவாகிர்,எஸ்.நஸார்,எல்.ஓ.சப்ராஜ், கே.எம்.மௌசூன் ஹாஜி, எஸ்.அனஸ், சமுர்த்தி உத்தியோகத்தர் சபீக்,எம்.ஏ.நஸீம் , ஐ.எம்.சகீம் , ஏஸ்.கலீல் றஹ்மான் , ஆகியோர் நிதி உதவி வழங்கி ஒத்துழைப்பு வழங்கினர்.

மேலும் இந்நிகழ்வுக்கு DEEN STUDIO & AUDIO SYSTEM சிறப்பாக ஒலி , ஒளி வடிவமைத்து நிகழ்வை சிறப்பாக நடாத்துவதற்கு பங்களிப்புச் செய்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

அத்தோடு இந்நிகழ்வில் 5 ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியையான சபீறா அவர்களுக்கு பெற்றோர்கள் பரிசில்களை வழங்கி கௌரவித்ததோடு இரண்டு முறை ஜனாதிபதி விருது பெற்ற பாடசாலை அதிபர் ஜே.எம்.மாகீர் அவர்களுக்கு அல்-முபஸ்ஸிறா சமூக அபிவிருத்தி நிலையத்தின் முக்கியஸ்தர்களான எம்.எம்.நியாஸ் ஆசிரியர் , ஏ.நுஸ்ரி , bco , ஜே.ஜஸீர் ஆகியோரினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதோடு , ஆசிரியர் பதவியிலிருந்து ஓய்வு பெறும் என்.எம்.சித்தீக் ஆசிரியரையும் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.

மேலும் 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்ற  மாணவ,மாணவிகளுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வை ஆசிரியர்களான எஸ்.எச்.மாகீர் (உதவி அதிபர்)  , என்.எம்.ஹிஸாம் , எம்.எஸ்.ஹில்மி , ஆகியோர் வழிநடாத்தினர். அத்தோடு ஆசிரியர்கள் , மாணவர்களின் கலை நிகழவும் அரங்கேறியது , மற்றுமோர் சிறப்பம்சமாகும். இந்நிகழ்வு அனிஸ்டா ஆசிரியையின் ஏற்புரை , எம்.ஐ.சவாகிர் அவர்களின் கவிதை , பெற்றோர்கள் சார்பாக எஸ்.நஸார் ஆற்றிய உரை ஐ.எம்.சகீமின் நன்றி உரையோடு இனிதே நிறைவடைந்தது.No comments:

Post Top Ad