சிலரின் சதிகள் பற்றி எனக்கு நன்கு தெரியும் ; கல்முனை முன்னால் மேயர் சிராஸ் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, November 09, 2013

சிலரின் சதிகள் பற்றி எனக்கு நன்கு தெரியும் ; கல்முனை முன்னால் மேயர் சிராஸ்

(v v)

நான் ஒன்றும் சின்னப் பிள்ளை இல்லை எனத் தெரி­வித்த கல்­முனை மாந­கர சபையின் முன்னாள் மேயர் சிராஸ் மீரா­சா­ஹிப், சிலர் தன்னைக் கட்­சி­யி­லி­ருந்து வெளியேற்ற மேற்­கொண்­ட சதிகள் பற்றி தான் நன்கு உணர்ந்­துள்­ள­தா­கவும் குறிப்­பிட்­டார்.
 
முஸ்லிம் காங்­கிரஸிலி­ருந்து உங்­களை கழற்றி எடுக்க வேறு முஸ்லிம் கட்­சிகள் முயற்­சித்­த­தாகச் சொல்­­கி­றார்­க­ளே என ஊட­க­வி­ய­லாளர் ஒருவர் எழுப்­பிய கேள்­விக்கு பதி­ல­­ளிக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்­டார்.
 
சிராஸ் மீரா­சாஹிப் மேயர் பத­வியை இரா­ஜி­னாமாச் செய்­தமை தொடர்பில் அறி­விக்கும் ஊட­க­வி­ளலாளர் மாநாடு இன்று மாலை கட்­சியின் தலை­மை­ய­க­மான தாருஸ்­ஸ­லாமில் நடை­பெற்­றபோத அவர் இவ்­வாறு குறிப்­பிட்­டார்.
 
சிராஸ் மீரா­சாஹிப் தொடர்ந்து கருத்து வெளியி­டு­கை­யில்,
 
இந்த விட­யத்தைப் பயன்­ப­டுத்தி என்னைக் கட்­சி­யி­லி­ருந்து வெளியேற்ற வேண்டும் என்ற சதித்­திட்­டத்­தோடு இரண்டு அல்­லது மூன்று பேர் நாட­க­மா­டி­யி­ருக்­கி­றார்கள் என்பது எனக்கு இப்­போது புல­னா­கின்­றது. அத­னால்தான் அவர்­க­ளது சதி­க­ளுக்குள் சிக்கி விடக் கூடாது என்­ப­தற்­காக இந்த முடிவை எடுத்­தேன்.
 
இந்த முடிவின் பின்­ன­ணியில் எந்­த­வித அழுத்­தங்­களும் இல்லை. சுய­மாக நன்கு சிந்­தித்ததன் பின்­னரே இந்த முடி­வுக்கு வந்தேன். 31 ஆம் திகதி வரை நான் கால அவ­காசம் கோரி­­யி­ருந்தேன். இருப்­பினும் 1 ஆம் திகதி தலைவர் அதி­ர­டி­யாக சில அறி­வித்தல்­களை விடுத்­தார். கட்­சியின் தலைவர் என்ற வகையில் தீர்­மா­னங்­களை மேற்­கொள்­வ­தற்­கான அதி­காரம் அவரிடம் இருக்­கி­றது. அதனை நான் மதிக்­கி­றேன்.
 
கடந்த ஒரு வார கால­மாக கட்­சியின் தலை­வ­ரு­டனும் ஏனைய முக்கி­யஸ்­தர்­க­ளு­டனும் தொடர்ச்­சி­யாக பல தட­வைகள் நேர­டி­யா­கவும் தொலை­பே­சி­யூ­டா­கவும் கலந்­து­ரை­யா­டி­யதன் பிற்­பாடே இந்தத் தீர்­மா­னத்­திற்கு வந்­துள்­ளேன். வௌ்ளிக் கிழமை நல்ல நாள் என்­ப­தால்தான் நேற்று தலை­வரைச் சந்­தித்து இரா­ஜி­னாமாக் கடி­தத்தை கைய­ளித்­தேன்.
 
நான் அர­சி­ய­லுக்குள் பிர­வே­சித்து 45 நாட்­க­ளுக்குள் மேய­ராக தெரி­வா­­னவன். கடந்த 2 வருட பதவிக் காலத்­துக்­குள் கல்­முனை மாந­கர சபைக்­குட்­பட்ட பகு­தி­களில் முடி­யு­மான பல அபி­வி­ருத்தித் திட்டங்­களை மேற்­கொண்­டுள்ளேன் எனவும் அவர் மேலும் குறிப்­பிட்­டார்.
.

No comments:

Post Top Ad