எரிபொருள் தீர்ந்த செயற்கைகோள் இன்று பூமியில் விழப்போகிறது கடலில் விழலாம் என எதிர்பார்ப்பு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, November 11, 2013

எரிபொருள் தீர்ந்த செயற்கைகோள் இன்று பூமியில் விழப்போகிறது கடலில் விழலாம் என எதிர்பார்ப்பு


விண்வெளியில் எரிபொருள் முற்றிலும் தீர்ந்துவிட்ட நிலையில் செயற்கைகோள் ஒன்று, இன்று பூமியில் விழவுள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு கடல் ஆராய்ச்சிக்காக ஜோஸ் என்ற செயற்கைகோளை ஐரோப்பிய விண்வெளி ஆய்வுக்கழகம் செலுத்தியது.
பூமிக்கு மேற்பரப்பில் சுழன்றபடி ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் எரிபொருள் முற்றிலும் தீர்ந்துவிட்டது.

இது கீழே வரும்போது முற்றிலும் உருக்குலைந்த நிலையில் தான் வரும் என்றும், விழும் போது அதன் துண்டுகள் தான் நமக்கு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுவும் 90 கிலோ அளவுக்குத்தான் இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பூமியில் மனித நடமாட்டமே இல்லாத ஒரு இடத்தில் தான் வந்து விழும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள விஞ்ஞானிகள், அனேகமாக கடல் அல்லது துருவப் பிரதேசத்தில் விழலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post Top Ad