இராஜினாமா செய்யும்போது ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி முஸாபஹா செய்தனர் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, November 08, 2013

இராஜினாமா செய்யும்போது ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி முஸாபஹா செய்தனர்


கல்­முனை மாந­கர மேயர் பத­வி­யி­லி­ருந்து சிராஸ் மீரா­சாஹிப் இன்று காலை இரா­ஜி­னாமாச் செய்­­துள்­ள­தாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் வட்­டா­ரங்கள் தெரி­விக்­கின்­ற­ன.
 
இன்று காலை கட்­சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்­கீமைச் சந்­தித்த சிராஸ் மீரா­சாஹிப் தனது இரா­ஜி­னாமாக் கடிதத்தை கையளித்­த­தா­கவும் இரு­வரும் ஒரு­வ­ரை­யொ­ருவர் கட்டித் தழுவி முஸா­பஹா செய்­து கொண்­ட­தா­கவும் தெரி­ய­வ­ரு­கி­ற­து.
 
இது தொடர்பில் இன்று பிற்­பகல் கொழும்­பி­லுள்ள கட்­சியின் தலை­மை­ய­க­மான தாருஸ்­ஸ­லா­மில் இடம்­பெ­ற­வுள்ள விசேட ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் விரி­வாக விளக்­க­ம­ளிக்­கப்­படும் என கட்­சியின் ஊடகப் பிரிவு தெரி­வித்­துள்­ள­து.
 
கடந்த வாரம் சாய்­த­ம­ருதில் இடம்­­பெற்ற மக்கள் சந்­திப்பில்  சிராஸ் மீரா­சாஹிப் தொடர்ந்தும் மேய­ராக பதவி வகிப்பார் என தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டி­ருந்­தது. இருப்­பினும் நேற்று வியா­ழக்­கி­ழமை வெ ளியா­ன விடி வௌ்ளி பத்­தி­ரி­­­கைக்கு கருத்து வெ ளியிட்ட சிராஸ் மீரா­சாஹிப் தான் ஒரு­போதும் மேயர் பத­வியை இரா­ஜி­னாமாச் செய்ய முடி­யாது எனக் கூற­வில்லை என­வும் கால அவ­கா­சமே கோரி­யி­ருந்­த­தா­கவும் குறிப்­பிட்­டி­ருந்­தமை இங்கு சுட்­டிக்­காட்­ட­த்­தக்­க­தா­கும்.

No comments:

Post Top Ad