கத்தார் ஆண்களுக்கு நான்கு மாதம் கட்டாய ராணுவப்பணி - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, November 14, 2013

கத்தார் ஆண்களுக்கு நான்கு மாதம் கட்டாய ராணுவப்பணி


கத்தார் நாட்டில் இருக்கும் ஆண்கள் நான்கு மாதங்கள் கட்டாய ராணுவ சேவையில் ஈடுபடுவது குறித்த வரைவு சட்டத்திற்கு அந்நாட்டு அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இத்தகைய சட்டம் இயற்றப்படுவது அந்நாட்டில் இதுவே முதல் முறையாகும். 


இந்த சட்டத்தின் கீழ் பட்டதாரிகளாக இருக்கும் 18-லிருந்து 35 வயதுக்குட்பட்ட ஆண்கள் மூன்று மாத காலமும், பட்டதாரிகள் இல்லையென்றால் அவர்கள் நான்கு மாத காலமும் ராணுவத்தில் பணிபுரிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நேற்று இந்த மசோதா அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டு ஆலோசனைக் கவுன்சிலான மஜ்லிஸ் அல்-சுராவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. அங்கிருந்து ஒப்புதல் கிடைத்தவுடன் இந்த மசோதா சட்டமாக இயற்றப்படும்.

நாட்டின் பாதுகாப்பிற்காக வழக்கமான படைகள் இருக்கும்போதிலும், இதனை வலுப்படுத்தும் விதமாக பின்னணியில் ஒரு ஆதரவுப் படை இருக்கவேண்டும் என்ற எண்ணத்திலேயே இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆயினும், கத்தார் இளைஞர்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளும்விதமாகவே இந்தத் திட்டம் துவக்கப்பட்டுள்ளதாக மற்றொரு அரசு அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post Top Ad