இரத்தம் சிந்தி பாதுகாத்து கொண்ட தாய் நாட்டை வெள்ளையர்களிடம் காட்டிக்கொடுக்கும் பாரிய சதி - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, November 11, 2013

இரத்தம் சிந்தி பாதுகாத்து கொண்ட தாய் நாட்டை வெள்ளையர்களிடம் காட்டிக்கொடுக்கும் பாரிய சதி


இரத்தம் சிந்தி பாதுகாத்து கொண்ட தாய் நாட்டை வெள்ளையர்களிடம் காட்டிக்கொடுக்கும் பாரிய சதித்திட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான அரசசார்பற்ற அமைப்புகள் ஈடுபட்டுள்ளதாக தேசப்பற்றுள்ள முன்னணி என்ற அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான சமகி அமைப்பு மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் அந்த கட்சியின் தலைமையகத்தில் எதிர்வரும் 13, 14 ஆம் திகதிகளில் இந்த சதித்திட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்து அந்த முன்னணி சில நகரங்களில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளது.

எதிர்வரும் 13, 14 ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெறவுள்ள மனித உரிமை கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் முன்மொழியப்பட்டுள்ள பரிந்துரைகளை அமுல்படுத்த கோரியும், பொதுநலவாய அமைப்பின் விழுமியங்களை பின்பற்றுமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.

No comments:

Post Top Ad