நாங்கள் என்றும் திறந்த மனதுடனேயே உள்ளோம் ; ஜனாதிபதி - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, November 14, 2013

நாங்கள் என்றும் திறந்த மனதுடனேயே உள்ளோம் ; ஜனாதிபதி


நாங்கள் என்றும் திறந்த மனதுடனேயே உள்ளோம் எங்களுக்கு மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. எவருடனும் நாம் பேசத் தயார். ஆனால் நாட்டைப் பிரிக்க ஒருபோதும் இடமளியேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.
நாளை (15) பொதுநலவாய அரச தலைவர்களின் கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னோடியாக கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற ஊடக கலந்துரையாடலில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார். இங்கு ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில்-


பல நாடுகளிலிருந்தும் ஊடகவியலாளர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அவர்கள் இங்குள்ள உண்மை நிலையை அறிய விருப்பம் கொண்டவர்களாக இருப்பின்  தான் மகிழ்ச்சியடைவதாகவும் கூறிய அவர்
அவர்கள் எல்ரீரீஈ ஆதரவாளர்களுடனோ அல்லது அவர்கள் சார்பாக வருகை தந்துள்ளவர்களுடனோ மாத்திரம் பேச்சுவார்த்தை நடாத்தாமல் எங்களுடனும் பேச்சுவார்த்தை நடாத்த வேண்டும். தனது கொள்கை சகலரது மனங்களையும் வெற்றிகொள்வதேயாகும் எனவும் கூறினார்.


சரணடைந்த 14000 எல்ரீரீஈ உறுப்பினர்களை குறுகிய காலத்துக்குள் புனர்வாழ்வளித்து சமூகத்தில் இணைத்துக்கொண்டதுடன் யுத்தத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட சிறுவர்களை குறுகிய காலத்துள் அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைத்துள்ளோம்
எனவும் அவர் சுட்டிக் காட்டினார்;.


30 வருடங்களாக நடைபெற்ற யுத்தத்தினால் நாம் பாதிப்புற்றுள்ளோம். யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் வரை படுகொலை செய்யப்பட்ட பெண்கள்இ கர்ப்பிணி பெண்கள் பிள்ளைகள்  மழலைகள் பற்றி பேசாமல் 2009 ம் ஆண்டைப்பற்றி மாத்திரம் பேசுவதேன்?


2009 க்கு முன்பு தினமும் மக்கள் பயங்கரவாதிகளினால் படுகொலை செய்யப்பட்டனர். குண்டு வெடிப்புக்கள் இடம்பெற்றன. தற்போது அவை யாவும் ஒரு முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.


அத்துமீறல்கள் சம்பந்தமாக எவரும் முறைப்பாடு செய்யவிரும்பினால் அதற்கான நீதித்துறை வசதிகள்
நம் நாட்டில் உள்ளனவெனவும் ஜனாதிபதி  கூறினார். ஏதாவது முறைகேடான வகையில் நடந்திருந்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நாம் தயாராகவுள்ளோம்


தான் எவரையும் சந்திக்கவோ பேச்சுவார்த்தை நடாத்தவோ தயாராக உள்ளதாக ஜனாதிபதி கூறினார். நாட்டை பிரிப்பதற்கு மாத்திரம் இடமளிக்க போவதில்லையென கூறிய ஜனாதிபதி யுத்தத்தின் பின்பு மக்கள் சமாதானத்துடன் வாழ்கின்றனர் எனவும் கூறினார்.


ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ஜனாதிபதி  பிரித்தானிய பிரதம மந்திரி டேவிற் கமரூனை சந்திப்பதற்கு  சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும் கூறினார்.


இந்திய பிரதமர் மகாநாட்டுக்கு சமூகமளக்காதது குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு- இந்தியாவின் பங்கேற்பை தான் முழுமையாக ஏற்றுக் கொண்டதாகவும் இந்திய பிரதமர் 2011 பேர்த்தில் நடைபெற்ற மகாநாட்டிலும் பங்கேற்கவில்லையெனவும் சுட்டிக்காட்டினார்


No comments:

Post Top Ad