ஏமாற்று பேர்வழிகளிடம் இருந்து கல்முனையை விடுவிக்க வேண்டுமென்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும். - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, November 08, 2013

ஏமாற்று பேர்வழிகளிடம் இருந்து கல்முனையை விடுவிக்க வேண்டுமென்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும்.


கடந்த கல்முனை கல்முனை மாநகர சபை தேர்தலின் போது முஸ்லிம் காங்கிரஸ் பாரிய படுதோல்வியை அடையும் நிலையில் இருந்தது.
இதன் காரணமாக  நிசாம் காரியப்பருக்கு மேயர் பதவி தருவதாக அவரை ‘பே’க் காட்டி கல்முனைக்கு அனுப்பினர் முஸ்லிம் காங்கிரஸ்காரார்கள். அவர் தோற்றால் முகவரி இல்லாமல் போய் விடுவார் என்பது அவர்கள் கணிப்பு. அவர் ஒரு சிறந்த சட்டத்தரணி. அவர் கட்சிக்குள் இருந்தால் தலைமைத்துவத்துக்கு சவாலாக மாறி விடுவார் என்ற அச்சத்தில் ஒரு குட்;டித்தேர்தலின் நாயகனாக அவரை அனுப்பினர். அவரும் அறிவில்லாமல் தலைமை எப்படிப்பட்டது என்று தெரிந்தும் அதனை நம்பி இத்தேர்தலில் குதித்தார்.திடீரென பணம் உள்ள சிராஸைக்கண்டதும், அவரிடம் அதிகமாக சுருட்டிக்கொண்டவர்கள் யார் அதிக வாக்கு பெறுகிறார்களோ அவருக்கே முதல்வர் பதவி என சூடேற்றினர். இதனைக்கேட்ட சாய்ந்தமருதின் மு. கா உயர்சபை மடையர்கள் தமதூருக்கு முதல்வர் பதவி பெற இதுதான் சந்தர்ப்பம் என மக்களை உசுப்பேற்றினர்.  அதனைக்கண்ட கல்முனைக்குடி மு. கா உயர்மட்ட மடையர்கள் சாய்ந்தமருதான் மேயராகி விடுவான் அதனால் நாங்கள் நிசாம் காரியப்பருக்கு வாக்களிப்போம் என கல்முனைக்குடி மக்களை உசுப்பேற்றினர். இந்த உசுப்பேற்றலுக்கு இரண்டு ஊரையும் சேர்ந்த தப்லீக், தவ்ஹீத், அட நம்ம ஜமாஅதே இஸ்லாமி ஆதரவாளர்களும்  பலியாகினர். மார்க்கம் படித்த எவருமே இதனை கண்டிக்கவில்லை. கல்முனையில் உள்ள மௌலவிமார்களில் இதனை நானும் மௌலவி நதீருமே கண்டித்தோம். கல்முனைக்குடி, சாய்ந்தமருது, மருதமுனை உலமா சபைகள் கூட இந்த பிரதேச வாதத்தை கண்டிக்க முன்வராமல் ஒளித்துக்கொண்டார்கள்.


நான் மு. காவை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டதால் கல்முனைக்குடியான் மேயராக வர வேண்டும் என்ற பிரதேச வாதத்தின் முன்னால் தோற்று விட்டேன்.


ஆக, தேர்தலில் போட்டியிட்டால் மேயர் பதவி தருவதாக நிசாம் காரியப்பருக்கு மு. கா தலைமை சொல்லியிருந்தால் அவருக்கே அதனை வழங்கியிருக்க வேண்டும். இப்போது சிராஸை நீக்கியவாது வழங்கியே ஆக வேண்டும். இவ்வாறு அவரிடம்; சொல்லப்பட்டதாக தேர்தல் காலத்தில் அவரது ஆதரவாளர்கள் கூறினார்கள். ஆனால் இப்போது அது பற்றி நிசாம் பேசுவதைக்காணவில்லை. தானும் தலைமையை குற்றம் சாட்டினால் தன்னையும் கட்சியிலிருந்து தூக்கிவிடுவார்களோ என்று அவர் பயந்து ஒடுங்கிக்கொண்டிருக்கிறார் போலும்.


அவ்வாறு அவரிடம் சொல்லப்படாமல் இருந்து அதிக வாக்கு பெற்றவரே முதல்வர் என்பது பகிரங்கமாக கூறப்பட்ட விடயம் என்பதால் அதனைப்பெற்ற சிராஸே தொடர்ந்தும் மேயராக இருப்பதே நியாயமும் தர்மமுமாகும். ஆனால் இன்றைய மேயர் சிராஸ் மிகப்பெரிய ஊழல் பேர்வழியாகவும், அவரது கட்சியான முஸ்லிம் காங்கிரஸ் மிகப்பெரிய ஏமாற்று, கொள்ளைக்கோஷ்டிகளின்  கட்சியாகவும் அதன் உறுப்பினர்கள் சயநலவாத ஏமாற்றுப்பேர்வழிகளாகவும் இருப்பதாலும் இவர்களிடமிருந்து கல்முனையை விடுவிக்க வேண்டுமென்பதே எமது முஸ்லிம் மக்கள் கட்சியின் நிலைப்பாடாகும்.

No comments:

Post Top Ad