படப்பிடிப்பின் போது மாடுகள் குழம்பியதால் சீகிரியாவில் நடந்த விபரீதம் (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, November 29, 2013

படப்பிடிப்பின் போது மாடுகள் குழம்பியதால் சீகிரியாவில் நடந்த விபரீதம் (படங்கள் இணைப்பு)


சீகிரிய பிரதேசத்தில் படப்பிடிப்புக்கு பயன்படுத்திய மாட்டு வண்டி குளத்துக்குள் விழுந்துள்ளது.
படப்பிடிப்பின் போது வண்டியில் கட்டியிருந்த மாடு குழம்பியதை அடுத்து வண்டி அருகில் இருந்த குளத்தில் புரண்டு விழுந்துள்ளது.

வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த வண்டிக்காரர் உட்பட மூவரும் குளத்தில் விழுந்த நிலையில், படக்குழுவினர் அவர்களைக் காப்பாற்றியுள்ளனர்.

பாடல் காட்சி ஒன்றை படம்பிடிப்பதற்காக இருவரை ஏற்றிய மாட்டு வண்டி, சிகிரிய வேகந்த என்ற மலைப் பகுதிக்கு எடுத்துச் வண்டிக்காரரால் செல்லப்பட்டது. அப்போதே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பின்னர், குளத்தில் விழுந்த மூவரையும் மாட்டையும் படப்பிடிப்புக் குழுவினர் காப்பாற்றி கரையேற்றியுள்ளனர்.No comments:

Post Top Ad