நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துமாறு வலியுறுத்தி சமகி அமைப்பு ஆர்ப்பாட்டம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, November 07, 2013

நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துமாறு வலியுறுத்தி சமகி அமைப்பு ஆர்ப்பாட்டம்


நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துமாறு வலியுறுத்தி ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையிலான சமகி அமைப்பு என்ற எதிர்க்கட்சிகளின் அமைப்பு இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது.
கொழும்பு மருதானை டெக்னில் சந்தியில் இருந்து பேரணியாக சென்றவர்கள் கோட்டை ரெயில் நிலையத்திற்கு எதிரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பலர் பங்குகொண்ட எதிர்ப்புப் பேரணியிலும் ஆர்ப்பாட்டத்திலும் பெருந்தொகையான ஆதரவாளர்களும், மக்களும் கலந்து கொண்டனர்.
இலங்கை அரசாங்கத்தின் எதேச்சதிகார, ஜனநாய விரோதப் போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியும் கலந்துகொண்டது.
பேரணி மற்றும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு புறக்கோட்டை பகுதியில் இன்று பிற்பகல் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
No comments:

Post Top Ad