கடும்போக்காளர்களினால் முஸ்லிம்களுக்கு நிம்மதி இல்லை ; மங்கள - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, November 14, 2013

கடும்போக்காளர்களினால் முஸ்லிம்களுக்கு நிம்மதி இல்லை ; மங்கள

(v v)

கடும்போக்காளர்கள் கடந்த இரு வருடங்களாக நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பதால் முஸ்லிம்களுக்கு நிம்மதி இல்லாது செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவ சபை உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீர தெரிவித்தார்.


கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துமாறும் பொதுநலவாய நாடுகளின் பிரகடனத்திற்கு மதிப்பளிக்குமாறும் வலியுறுத்தி  ஐக்கியத்திற்கான மக்கள் அமைப்பு (சமகி)நேற்று புதன் கிழமை ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவில் மனித உரிமை போராட்டமொன்றை நடத்தியது. இந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக பல கோஷங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அத்தோடு அவர்களின் சமய உரிமை பறிக்கப்பட்டுள்ளது. அத்தோடு முஸ்லிம் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டுள்ளன. கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் நாட்டில் பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டை நடத்தும் அரசு சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் உரிமையை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

No comments:

Post Top Ad