முஸ்லிம் மக்களின் உணவு தொடர்பில் பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடாது - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, November 13, 2013

முஸ்லிம் மக்களின் உணவு தொடர்பில் பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடாது

சில அமைப்புகள் ஹலால் உணவுகள் தொடர்பாக கருத்துக்களை வெளியிட்டு மக்கள் மத்தியில் இருக்கும் ஐக்கியத்தையும் சகவாழ்வையும் சிதைத்து வருகின்றன என்று நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
இஸ்லாமிய வருடப் பிறப்பை முன்னிட்டு காலியில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போது அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

இவ்வாறான அமைப்புகள் தொடர்பில் இலங்கையின் சிறந்த வரலாற்றுக்கு உரிமை கூறும் முஸ்லிம் மக்கள் புரிந்துணர்வோடு செயற்பட வேண்டும்.
ஹலால் சம்பந்தமாக வேறு நாடுகளில் இல்லாத பிரச்சினையை பொதுபல சேனா அமைப்பு இலங்கையில் ஏற்படுத்த முயற்சித்து வருகிறது.
இது அடிப்படையின்றி முஸ்லிம் மக்களின் உணவு தொடர்பில் பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடாது என அமைச்சர் ஹக்கீம் குறிப்பிட்டார்.

No comments:

Post Top Ad