வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பிலிப்பைன்ஸ் நிறைமாத கர்ப்பிணி ஈன்றெடுத்த குழந்தை (வீடியோ இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, November 12, 2013

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பிலிப்பைன்ஸ் நிறைமாத கர்ப்பிணி ஈன்றெடுத்த குழந்தை (வீடியோ இணைப்பு)


சுப்ஹானல்லாஹ்

பிலிப்பைன்சில் வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்ட நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய பகுதியில் உள்ள சமர், லிஸ்தே தீவுகளை ஹையான் என்ற புயல் தாக்கியது.
மேலும் பலத்த மழையும் பெய்ததால் வெள்ளம் கரைபுரண்டோடியது.
இந்நிலையில் வெள்ளத்தில் அடித்துசெல்லப்பட்ட எமிலி ஒரிடிகா(21) நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர் அந்நாட்டு விமான நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.
இதனைத் தொடர்ந்து அவருக்கு பிரசவவலி ஏற்படவே, குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் என அலங்கோலமான நிலையில் கிடந்த விமான நிலையத்தில் அவருக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. இவர் அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
இதுகுறித்து ஒரிடிகா, தனக்கு குழந்தை பிறந்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும், அவளுக்கு ஜாய் என்று பெயர் வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்த புயலின் தாக்குதலுக்கு இதுவரை 10 ஆயிரம் பேருக்கு மேல் பலியாகி உள்ளனர்.

No comments:

Post Top Ad