இலங்கை நியூஸிலாந்து முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, November 10, 2013

இலங்கை நியூஸிலாந்து முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.


இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. 

ஹம்பாந்தோட்டையில் இடம்பெறும் இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. 


இதன்படி போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 288 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது. 

இலங்கை அணி சார்பாக டில்சான் 81 ஓட்டங்களையும் சங்கக்கார 79 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டுள்ளனர். 

இந்நிலையில் நியூஸிலாந்து அணி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கும்போது மழை குறுக்கிட்டது. 

இன்றைய போட்டி இடைநிறுத்தப்படும்போது 4.2 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டை இழந்து 13 ஓட்டங்களை பெற்றிருந்தது. 

இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி எதிர்வரும் 12ஆம் திகதி இடம்பெறவுள்ளது. 

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து அணி மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு 20க்கு இருபது போட்டிகளில் விளையாடவுள்ளது. 

No comments:

Post Top Ad