பஸ் சாரதிகள் கையடக்கத் தொலைபேசி பாவித்தால் இந்த இலக்கததுக்கு அறிவிக்கவும் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, November 12, 2013

பஸ் சாரதிகள் கையடக்கத் தொலைபேசி பாவித்தால் இந்த இலக்கததுக்கு அறிவிக்கவும்


ஊவா மாகாணத்தின் சேவையிலீடுப்படுத்தப்பட்டிருக்கும் இ. போ.ச. பஸ்களின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் கடமை வேளையில் கைத்தொலைபேசிகளைப் பயன்படுத்துவார்களாயின் அது தொடர்பாக ஊவா மாகாண இ.போ.ச பிராந்திய முகாமையாளருக்கு உடன் அறிவிக்கும்படி பஸ் பயணிகள் கேட்கப்பட்டுள்ளனர்.
 
பூணாகலையில் இடம்பெற்ற கோர பஸ் விபத்தினையடுத்து போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் கடமை வேளையில் கைத்தொலைபேசிகளை பாவிப்பதை தடை செய்திருந்தார்.
 
இத் தடையினை மீறி செயற்படும் ஊவா மாகாண இ. போ. ச. சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் குறித்து பஸ் பிரயாணிகள் ஊவா மாகாண இ.போ.ச. பிராந்திய முகாமையாளர் பிரேமலால் சில்வாவிற்கு 077 1057700 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்கும்படி பயணிகள் கேட்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post Top Ad