பாகிஸ்தான் தலிபான் போராளிகளின் புதிய தலைவர் நியமனம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, November 08, 2013

பாகிஸ்தான் தலிபான் போராளிகளின் புதிய தலைவர் நியமனம்


பாகிஸ்தானில் இயங்கும் தலிபான் முஸ்லிம் போராளிகள் குழு தமது புதிய தலைவரை அறிவித்துள்ளது.


தலிபான் இயக்கத்தின் கடும்போக்கு தளபதிகளில் ஒருவரான முல்லா பஸ{ல்லா என்பவர், இந்த இயக்கத்துக்கான புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரது கட்டுப்பாட்டில் உள்ள குழுவினரே பாகிஸ்தானிய பாடசாலை சிறுமியான மலாலா யுசாப்சாய் மீது துப்பாக்கி தாக்குதலை நடத்தி இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 1ம் திகதி அமெரிக்காவின் ஆளில்லா விமான தாக்குதலில், பாகிஸ்தானிய தலிபான் தலைவர் ஹக்கிமுல்லா மெஹ்சுட் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, புதிதாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post Top Ad