நண்பர்களை அதிர்ச்சுக்குள்ளாக்கிய தலைகள் துண்டிக்கப்பட்ட வடிவிலான திருமண கேக் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, November 08, 2013

நண்பர்களை அதிர்ச்சுக்குள்ளாக்கிய தலைகள் துண்டிக்கப்பட்ட வடிவிலான திருமண கேக்


அமெரிக்காவில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் மணமக்களின் முக சாயலில் தயாரிக்கப்பட்ட ‘கேக்’ விழாவிற்கு வந்திருந்து நண்பர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அமெரிக்காவில் டெக்சாஸ் பகுதியைச் சேர்ந்த டேவிட் சைடுசெர்ப்-நதாலே என்ற இளம் தம்பதியர் தங்களது திருமண ‘கேக்'கை வித்தியாசமான முறையில் உருவாக்கியுள்ளார்கள்.
அதில் மணமக்களின் முக சாயலில் ஆண்-பெண் துண்டிக்கப்பட்ட தலை மற்றும் அதோடு அதோடு கேக்கின் அருகில் ‘மரணம் வரையில் எங்களுக்குள் பிரிவு இல்லை' என்ற வாசகத்தையும் எழுதி வைத்துள்ளனர்.
இதுகுறித்து மணப்பெண் நதாலேயே கூறுகையில், எனது கணவர் டேவிட் திகில் சினிமாப்பட பார்ப்பதில் தீவிர ரசிகர். அவரை மகிழ்விக்கவே இதை தயாரித்தேன் என்றும் இது அனைவரையும் வியக்க வைத்தது உண்மை எனவும் கூறியுள்ளார்.
இதனை தயாரிப்பதற்காக 40 மணி நேரம் செலவிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.

No comments:

Post Top Ad