அப்துல்லா யாமீன் மாலைதீவு ஜனாதிபதியானார் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, November 17, 2013

அப்துல்லா யாமீன் மாலைதீவு ஜனாதிபதியானார்


மாலத்தீவில் சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதலின்பேரில் கடந்த 9-ம்தேதி அதிபர் பதவிக்கான தேர்தல் நடத்தப்பட்டது. இதில் முன்னாள் அதிபர் முகமது நஷீத் அதிக வாக்குகள் பெற்று முதலிடத்தில் இருந்தாலும், 50 சதவீத வாக்குகளை பெறாதால் பதவியேற்க முடியாத நிலை ஏற்பட்டது.


தேர்தலில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குகளை பெறும் வேட்பாளர்தான் அதிபர் பதவியேற்க முடியும் என் விதிமுறை மாலத்தீவில் உள்ளது. முதல்கட்ட தேர்தலில் வெற்றிக்குத் தேவையான வாக்குகளை யாரும் பெறாததால், அதில் முதல் இரண்டு இடங்களைப்பிடித்த முகமது நஷீத், அப்துல்லா யாமீன் ஆகியோர் இரண்டாம் கட்ட தேர்தலில் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டது. 

இதற்கிடையே அதிபர் பதவி வகித்து வந்த முகமது வாகித், தேர்தல் சர்ச்சை காரணமாக நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், இன்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்றது. முதல்கட்ட தேர்தலில் அதிக வாக்குகள் பெற்ற முகமது நஷீத்துக்கு இந்த முறை பின்னடைவு ஏற்பட்டது. 59 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்ற அப்துல்லா யாமீன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முகமது நஷீத் 48.5 சதவீத வாக்குகள் பெற்றுள்ளார். இதனால் அப்துல்லா யாமீன் அதிபராக விரைவில் பதவியேற்க உள்ளார்.

No comments:

Post Top Ad