மூதூரில் மர்ஹூம் அல்ஹாஜ் எம்.ஈ.எச்.மஹ்ரூப் நினைவு தின முப்பெரும் விழா - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, November 30, 2013

மூதூரில் மர்ஹூம் அல்ஹாஜ் எம்.ஈ.எச்.மஹ்ரூப் நினைவு தின முப்பெரும் விழா


திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் துறைமுகங்கள் கப்பற்றுறை இராஜாங்க அமைச்சருமான ‘மர்ஹூம் அல்ஹாஜ் எம்.ஈ.எச்.மஹ்ரூப் அவர்களின் கல்விப் பணிகள்’ நூல் வெளியீட்டு விழா நாளை ஞாயிற்றுக்கிழமை காலை10.00 மணிக்கு மூதூர் அல் ஹிதாயா மகா வித்தியாலயத்தில் நடைபெறும்.

மர்ஹும் மஹ்ரூப் அவர்களின் 16வது நினைவு தினத்தையொட்டி நடத்தப்படும் முப்பெரும் விழாவில் ஒரு அங்கமாக இது இடம்பெறுகின்றது. கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தலைமையில் இடம்பெறும் இவ்வைபவத்தில் பாராளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சி பொதுச் செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்க பிரதம அதிதியாகக் கலந்து கொள்வார்.
ஏ.ஸீ.எம்.முஸ்இல் எழுதியுள்ள இந்நூலின் ஆய்வுரையை கலாநிதி கே.எம்.எம்.இக்பால் நிகழ்த்துவார். புதிய பாடசாலைகள் ஆரம்பித்தல், புதிய மகளிர் வித்தியாலயங்கள் ஆரம்பித்தல், சொந்தக் காணிகளில் புதிய பாடசாலைகள் ஆரம்பித்தல், பாடசாலைகளுக்கு வசதிகள் ஏற்படுத்தல், பாடசாலைகள் தரமுயர்த்தல், கோட்டக் கல்வி அலுவலகம் தாபித்தல், கல்வி அமைச்சர்களை அழைத்தமை, கிண்ணியாவில் ஆசிரிய சேவை முன்பயிற்சி, கட்சி பேதம் பாரா சேவை போன்ற தலைப்புகளின் கீழ் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
1977 ஆம் ஆண்டு முதல் 1997 ஆம் ஆண்டுவரை தொடர்ந்து 20 வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்டு வந்த மர்ஹூம் மஹ்ரூப் தொடர்பாக வெளிவரும் முதலாவது நூல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post Top Ad