இறுதி யுத்தம் ஆரம்பமான மாவிலாற்றிலிருந்து ஆயுதங்கள் மீட்பு (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, November 09, 2013

இறுதி யுத்தம் ஆரம்பமான மாவிலாற்றிலிருந்து ஆயுதங்கள் மீட்பு (படங்கள் இணைப்பு)


மட்டக்களப்பு மாவிலாறு பிரதேசத்தின் காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு தொகுதி ஆயுதப் பொருட்கள் இன்று சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர்.
ரி.56 ரக துப்பாக்கி .01 ,
எம்.ரி.எம்.ஜி. ரக துப்பாக்கி-01
எல்.எம்.ஜி. ரவைகள் 400.
ரி.56 ரக துப்பாக்கி ரவைகள். 2000.
சீ4 வெடிமருந்து 15 கிலோ.
ரி.என்.ரி. வெடிமருந்து 20 கிலோ மற்றும் வயர்

உள்ளிட்ட ஆயுதங்களையும், உபகரணங்களுமே மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
வாகரை பிரதேச இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வாகரை 233 ஆவது படைப்பிரிவு இராணுவத்தினரும் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்தே மேற்படி பொருட்;களை மீட்டுள்ளதாக வாகரை பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
இவை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரால் கடந்த காலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என பொலிசார் தெரிவித்தனர்.


No comments:

Post Top Ad