சூரியனை நோக்கி பாய்ந்து சென்ற ஐசான் வால் நட்சத்திரம், சுக்கு நூறாக சிதறிப் போனது (வீடியோ இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, November 29, 2013

சூரியனை நோக்கி பாய்ந்து சென்ற ஐசான் வால் நட்சத்திரம், சுக்கு நூறாக சிதறிப் போனது (வீடியோ இணைப்பு)


சூரியனை நோக்கி படு வேகமாக பாய்ந்து சென்ற ஐசான் வால் நட்சத்திரம், சுக்கு நூறாக சிதறிப் போனதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், விறுவிறுப்பான எதிர்பார்ப்பையம் ஏற்படுத்தியது ஐசான் வால் நட்சத்திரம்.

இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு 12.15 மணிக்கு மேல், ஐசான் வால் நட்சத்திரம் சூரியனுக்கு வெகு அருகே போய் அதைக் கடந்து செல்ல முற்பட்டது.
ஆனால் சூரியனை நெருங்கிய அடுத்த சில நிமிடங்களிலேயே மாயமாகி போனது.
எனவே ஐசான் சிதறுண்டு சூரியனின் வெப்ப அலையில் சிக்கி பொசுங்கி ஆவியாகிப் போயிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
ஐசானை மீண்டும் பார்க்கவில்லை என நாசா விஞ்ஞானிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதேசமயம், சூரியனை நெருங்கி மாயமான பின்னர் ஐசானின் சிதறல் தப்பிப் பிழைத்துள்ளதாக புதிய செய்தி வெளியாகியுள்ளது.
இதனால் ஐசான் முழுமையாக பொசுங்கிப் போய் விட்டதா அல்லது அதன் சிதறலில் சில தப்பிப் பிழைத்ததா என்ற விவாதம் எழுந்துள்ளது.
நாசாவின் சோஹோ லாஸ்கோ சி2 மற்றும் சி3 தொலைநோக்கியானது மொத்தம் 76 படங்களை அனுப்பியுள்ளது.No comments:

Post Top Ad