அனுராதபுர ஐவர் கொலை விவகார சந்தேக நபர் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, November 07, 2013

அனுராதபுர ஐவர் கொலை விவகார சந்தேக நபர் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்

(tnk)
அநுராதபுரத்தில் ஐவரை வெட்டிக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பல வருடங்களுக்கு முன்னர் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவ ரென தெரியவந்துள்ளது.


அநுராதபுரத்திலிருந்து சென்ற விசேட பொலிஸ் குழுவினரால் ஹசலக பிரதேசத்தில் வைத்து நேற்று முன்தினம் மாலை கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி யுள்ளன.

கைது செய்யப்பட்ட 26 வயதுடைய இளம் சந்தேக நபரிடமிருந்து ஒரு இலட்சத்து 53 ஆயிரம் ரூபா பணம் மற்றும் தங்க ஆபரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இந்தப் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:
அநுராபுரம், விஹார ஹல்மில்லகுளம் பிரதேசத்திலுள்ள வீடொன்றில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவரது சடலங்கள் நேற்று முன்தினம் காலை 7.00 மணியளவில் மீட்டெடுக்கப்பட்டது. இந்தச் சம்பவம் அந்தப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்ததுடன் இந்த கொலை தொடர்பில் விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

குறித்த வீட்டிலிருந்து சடலமாக மீட்டெடுக்கப்பட்ட இளைஞனது நண்பர் என்று அடிக்கடி அந்த வீட்டுக்கு வந்து செல்லும் நபர் தொடர்பில் சந்தேகம் உள்ளதாக குடும்ப உறவினர்களும் அயலவர்களும் பொலிஸாரிடம் தெரிவித்ததை அடுத்து விசாரணைகள் மேலும் முடுக்கி விடப்பட்டது.

விசாரணைகள் ஆரம்பித்த அநுராதபுர விசேட பொலிஸ் குழு ஹசலக பிரதேசத்தில்வைத்து சந்தேக நபரை மடக்கிப் பிடித்தனர். சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது அவரிடமிருந்து 1,53,000 பணத்தை யும் ஏற்கனவே குறித்த வீட்டில் கொள் ளையிட்ட பணத்தில் வாங்கிய நான்கு தங்க மாலைகள் மணிக்கூடுகள் மற்றும் மோதிரத்தையும் மீட்டெடுத்துள்ளனர்.

இந்த தங்க ஆபரணங்களை சந்தேக நபர் பக்கமூன பகுதியில் கொள்வனவு செய்துள்ளார். குறித்த வீட்டில் ஐவரும் உறக்கத்தில் இருக்கும் போதே அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கூறிய ஆயுதங்களால்வெட்டி குத்தி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

அந்த வீட்டில் வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளிலேயே தப்பிச் சென்று பஸ் தரிப்பு நிலைய பகுதியில் மோட்டார் சைக்கிளை மறைத்து வைத்துவிட்டு பஸ்ஸில் ஏறிச்சென்றுள்ளார். தற்பொழுது மோட்டார் சைக்கிளும் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. அநுராதபுரத்திற்கு அழைத்து வரப்பட்ட சந்தேகநபர் நீதிமன்ற உத்தரவின் பேரில் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

No comments:

Post Top Ad