மெய்க்காவலரினால் சுட்டுக் கொல்லப்பட்ட ஈரான் பிரதியமைச்சர் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, November 11, 2013

மெய்க்காவலரினால் சுட்டுக் கொல்லப்பட்ட ஈரான் பிரதியமைச்சர்


ஈரான் ஜனாதிபதி ஹசன் ரவுஹானியின் அமைச்சரவையில் தொழில்துறை பிரதியமைச்சராக பதவி வகிப்பவர், சஃப்தார் ரஹ்மதபாடி.
தலைநகர் டெஹ்ரானின் கிழக்கு பகுதியில் சஃப்தார் ரஹ்மதபாடி காரில் சென்றுக் கொண்டிருந்தபோது, சற்றும் எதிர்பாராத வேளையில் பிரதியமைச்சரை அவரது பாதுகாவலர்களில் ஒருவர் சுட்டுக் கொன்றார். 


தலை மற்றும் மார்பில் குண்டுகள் பாய்ந்த நிலையில் காருக்கள் சுருண்டு விழுந்த அமைச்சர் சம்பவவிடத்திலேயே மரணமானார்.
எனினும், பாதுகாவலரால் அமைச்சர் சுட்டுக் கொல்லப்பட்டதை ஈரான் அரசு இன்னும் உறுதிபடுத்தவில்லை. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த புதன்கிழமை அரசு வழக்கறிஞர் ஒருவரை அவரது பாதுகாவலரே சுட்டுக்கொன்ற அதிர்ச்சியில் இருந்து ஈரான் மக்கள் இன்னும் மீளவில்லை.

இந்நிலையில், அமைச்சர் ஒருவரையும் அவரது பாதுகாவலரே சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post Top Ad