சவூதியில் பொத்துவில் இளைஞர் வபாத் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, November 16, 2013

சவூதியில் பொத்துவில் இளைஞர் வபாத்

(vi)

அம்பாறை, பொத்துவில் அல் இர்பான் பாடசாலை பகுதியில் வசித்துவரும் கபூர் என்பவரின் மகன்  அஸ்வர் முஹம்மட் (வயது 26)   என்பவர் சவூதி அரேபியாவில்  நேற்று  மரணமடைந்துள்ளார்.
 
நேற்று முன்தினம் இரவுநேர சாப்பாட்டியினை முடித்துக்கொண்டு படுக்கைக்கு சென்றவர் மறுநாள் காலையில் எழும்பாத நிலையில் இருந்தமையை அறிந்த நண்பர்கள் சந்தேகத்தில் வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்றுள்ளனர்.
 
வைத்தியர்கள் இவர் உயிரிழந்துள்ளதாக உறுதி செய்ததை அடுத்து ஜனாஸா மேலதிக வைத்திய பரிசோதனைகளுக்காக சவூதி அரேபியாவில் வைக்கப்பட்டுள்ளது.
 
இதுவரையில் இவரின் மரணத்திற்கான வைத்திய அறிக்கை கிடைக்கப்பெறவில்லை என்பதுடன் திருமணமான அஸ்வர் முஹம்மட் கடந்த 7 வருடங்களாக சவூதி அரேபியாவில் பணிபுரிந்து வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post Top Ad