மேல் மாகாண சபை தேர்தலுக்காக கட்சிகள் அனைத்தும் தயார் நிலையில் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, November 30, 2013

மேல் மாகாண சபை தேர்தலுக்காக கட்சிகள் அனைத்தும் தயார் நிலையில்


எதிர்வரும் மேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட உள்ள ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் இரகசியமான முறையில் தமது முகாம்களை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவித்தன.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு பிரபலமான தலைவர்களை களத்தில் இறக்க தயாராகி வருகிறது.
முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவை தவிர இறுதிப் போரின் போது கட்டளை அதிகாரியாக பணியாற்றி தற்பொழுது அரச ராஜதந்திர சேவையில் இருக்கும் முன்னாள் இராணுவ அதிகாரி மற்றும் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உட்பட பலரது பெயர்கள் ஆளும் கட்சியினரிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
அதேவேளை எதிர்க்கட்சிகளும் கூட்டணியாக மேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட உள்ளதுடன் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எதிரணியில் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜே.வி.பியும் மேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட உள்ளதோடு அது தனது முதலமைச்சர் வேட்பாளராக கே.டி.லால் காந்தவை அறிவித்துள்ளதுடன் பிரசாரப் பணிகளை ஆரம்பித்துள்ளது.
இந்த நிலையில், மேல் மாகாண சபை எதிர்வரும் 18 ஆம் அல்லது 26 ஆம் திகதி கலைக்கப்பட உள்ளதுடன் மார்ச் மாதம் 1 ஆம் திகதி அல்லது 8 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படலாம் என தெரியவருகிறது.
இது தொடர்பில் அரசாங்கம் தேர்தல் திணைக்களத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது.

No comments:

Post Top Ad