வடக்கில் முஸ்லிம்களை மாத்திரமல்ல சிங்களவர்களையும் குடியேற்ற வேண்டும் ; முஸம்மில் கோருகிறார் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, November 08, 2013

வடக்கில் முஸ்லிம்களை மாத்திரமல்ல சிங்களவர்களையும் குடியேற்ற வேண்டும் ; முஸம்மில் கோருகிறார்

(v v)

வடக்கில் முஸ்லிம்கள் மீள்குடியேற்றப்படுவார்களென வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ள இத்தறுவாயில் யுத்தத்தின்போது வடக்கிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம்களை மாத்திரமின்றி சிங்களவர்களையும் உடனடியாக மீள் குடியேற்ற வேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் பேச்­சாளர் மொஹமட் முஸம்மில் கோரினார்.
 
தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போதே இதனைத் தெரிவித்தார்.
 
அவர் இங்கு மேலும் கூறுகையில்,
 
யுத்தத்தினால் தனது நிலங்களை விட்டுச் சென்ற முஸ்லிம்களை மீள்குடியேற்றுவதாக கூறியிருக்கும் சி.வி.விக்னேஸ்வரன் இத்தறுவாயில் புலிகளினால் விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம்களை மாத்திரமின்றி சிங்களவர்களையும் உடனடியாக மீள் குடியேற்ற வேண்டும்.
 
வடக்கு என்பது தனிநாடு அல்ல.அது இலங்கையின் ஒரு பகுதியாகும். எனவே, வடஇலங்கையின் கலாசாரத்தின் அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும். மேற்படி மீள்குடியேற்றப்படும் போது அனைத்து இனத்தவர்களும் வடக்கில் ஒற்றுமையாக வாழ வடக்கில் வழிபிறக்கும் என்றார்.

No comments:

Post Top Ad