ஒபாமா பற்றி ரகசிய தகவல் வெளியே கசிந்தது - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, November 11, 2013

ஒபாமா பற்றி ரகசிய தகவல் வெளியே கசிந்தது


அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமா பற்றி ரகசிய தகவல் வெளியே கசிந்துள்ளது.
அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமா, வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது தன்னுடன், குட்டி கூடாரத்தையும் எடுத்துக் கொண்டு செல்கிறார்.

இந்த கூடாரமானது ஒபாமா, தங்கியுள்ள ஹோட்டலுக்கு அருகில் அமைக்கப்படுகிறது.
இதில்தான் அவர் பெரும்பாலும் முக்கிய ஆலோசனைகளை நடத்துவார்.
ரகசியக் கமெராக்கள், ஒட்டுக் கேட்புக் கருவிகள் ஆகியவற்றின் அபாயங்களிலிருந்து தப்பிக்க இது பயன்படுகிறதாம்.
குறிப்பாக நட்பு நாடுகளுக்கு செல்கையில் கூட இதனை எடுத்துக் கொண்டு தான் செல்கிறார்.
இதுகுறித்து அமெரிக்க மத்திய உளவுப்பிரிவின் இயக்குநரான ஜேம்ஸ் உல்ஸி என்பவர் கூறுகையில், இப்போதெல்லாம் யாரையும் நம்ப முடியாது. எனவே ஜனாதிபதியின் பாதுகாப்பு, ரகசியங்களைக் காப்பது ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தர வேண்டியுள்ளது.
எனவேதான் இந்த கூடார யோசனையை அமல்படுத்தியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post Top Ad