வாழைச்சேனையில் வாகன விபத்து முச்சக்கர வண்டி சாரதிக்கு காயம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, November 07, 2013

வாழைச்சேனையில் வாகன விபத்து முச்சக்கர வண்டி சாரதிக்கு காயம்


வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 நேற்று மட்டக்களப்பு, மாவடிச்சேனை என்னும் இடத்தில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

வீதியில் முன்பாக சென்று கொண்டிருந்த வான் திரும்புவதற்கு எத்தணிக்கையில் பின்பாக வந்த முச்சக்கரவண்டி வானில் மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் முச்சக்கரவண்டி செலுத்தி வந்த மாவடிச்சேனையைச் சேர்ந்த எம்.ஐ.எம்.பாஹீம் (வயது 23) என்பவரே காயமடந்துள்ளார்.
காயமடைந்தவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இவ்விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.


No comments:

Post Top Ad