மாலைதீவில் ஜனாதிபதி தேர்தல் இன்று - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, November 09, 2013

மாலைதீவில் ஜனாதிபதி தேர்தல் இன்று


கடந்த பல மாதங்களில் நடந்த மூன்றாவது வாக்களிப்பு என்பதால், வாக்களிப்பு வீதம் குறைவாகவே இருந்தது.
இந்தத் தேர்தலில் வெற்றிபெறக்கூடியவராகக் கணிக்கப்படும் முன்னாள் அதிபரான முஹமட் நஷீட் அவர்கள், முன்னதாக செப்டம்பரில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றிருந்தார்.

அந்தத் தேர்தல் நீதியாகவும், நியாயமாகவும் நடந்ததாக கண்காணிப்பாளர்கள் கூறியிருந்தபோதிலும், அந்தத் தேர்தலை அதிகாரிகள் ரத்துச் செய்திருந்தார்கள்.
மஃமூம் அப்துல் ஹயூமிம் ஆதரவாளர்களையும் கொண்டுள்ள தற்போதைய நிர்வாகம், தான் மீண்டும் பதவிக்கு வருவதைத் தடுப்பதாக, நஷீட் குற்றஞ்சாட்டியிருந்தார்.
ஹயூமின் சகோதரரும் இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

இதற்கு முன்னர் நடந்த வாக்களிப்புகளில் வாக்காளர் பதிவை அவர் அங்கீகரிக்க மறுத்து வந்துள்ளார்.

பிபிசி

No comments:

Post Top Ad