பொதுநலவாய உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளாமை வருத்தமளிக்கிறது ; மன்மோகனின் கடிதம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, November 10, 2013

பொதுநலவாய உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளாமை வருத்தமளிக்கிறது ; மன்மோகனின் கடிதம்

(tm)

கொழும்பில் நடைபெறவிருக்கின்ற பொதுநலவாய உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளாமை வருத்தமளிப்பதாக இந்திய பிரதமர் மன்மோகன் சிங், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கைக்கான இந்திய தூதுவர் மூலம் இந்த கடிதம் ஜனாதிபதிக்கு கையளிக்கப்படவிருக்கின்றது. மாநாட்டில் தான் கலந்து கொள்ளாமல் இருப்பதற்கான காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை.

தமிழ் நாட்டிலிருக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஏனைய அமைப்புகளும் இந்தியா, இந்த மாநாட்டில் கலந்துகொள்ளக்கூடாது என்றும் பலத்தை எதிர்ப்பை தெரிவித்திருந்தன.

ஆயினும், இந்திய வெளிவிவகார அமைச்சரும், அமைச்சு அதிகாரிகளும் இந்திய பிரதமர் மாநாட்டில் பங்கேற்கவேண்டும் என்றே விரும்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post Top Ad