அமெரிக்க தூதரகத்தை தகர்ப்போம் ; பாகிஸ்தான் தலிபான் இயக்கம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, November 14, 2013

அமெரிக்க தூதரகத்தை தகர்ப்போம் ; பாகிஸ்தான் தலிபான் இயக்கம்


தங்களது தலைவர் ஹகிமுல்லா மசூத் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் வகையில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதிலுள்ள அமெரிக்க தூதரகத்தைத் தகர்க்கப்போவதாக பாகிஸ்தான் தலிபான் இயக்கம் மிரட்டல் விடுத்துள்ளது.

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைப்பு ஒன்றை மேற்கோள் காட்டி "தி நியூஸ்' பத்திரிகை நேற்று வெளியிட்டுள்ள செய்தியில்,
"பாகிஸ்தான் அரசையும், ராணுவத் தளபதியையும், இணையத்தில் கடுமையாக விமர்சித்துள்ள தலிபான் இயக்கம், அமெரிக்கத் தூதரகத்தைத் தகர்க்கவிருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளது. அதனால், அமெரிக்கத் தூதரகத்துக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே யாரும் எளிதில் நெருங்க முடியாத வகையில் அமெரிக்கத் தூதரகத்துக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது

No comments:

Post Top Ad