சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி வரும் போப் பிரான்சிஸ் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, November 13, 2013

சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி வரும் போப் பிரான்சிஸ்


தலைமை போப் ஆக பதவியேற்ற நாளில் இருந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி வரும் போப் பிரான்சிஸ் நேற்று முன்தினம் வாடிகன் நகரத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களிடையே தோன்றி சொற்பொழிவு ஆற்றினார்.


வாடிகன் அரண்மனை மற்றும் கத்தோலிக்க தேவாலயங்களில் பெருகி வரும் ஊழல்களை பற்றி விமர்சிக்கும் வகையில் அவர் பேசியதாவது:-

பைபிளின் புதிய ஏற்பாட்டில் உள்ள லூக்கா அத்தியாயத்தில் ஏமாற்றுவேலை இருக்கும் இடத்தில் கடவுளின் தூய ஆவி இருக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

எனவே தான், ஏமாற்றுக் காரர்களை பூமியில் விட்டுவைப்பதைக் காட்டிலும் அவர்களின் கழுத்தில் மைல் கல்லை கட்டி கடலில் தூக்கி எறிய வேண்டும் என்று இயேசு கிருஸ்து கூறியுள்ளார்.

நாட்டையும், மக்களையும் வஞ்சித்து ஊழலின் மூலம் பணத்தை கொள்ளையடித்து அதே பணத்தை தேவாலயங்களுக்கு நன்கொடையாக அளிப்பவர்கள் இரட்டை நிலைப்பாடு கொண்ட வாழ்க்கையை வாழ்பவர்கள்.

அவர்கள் பாவிகள்.இயேசு கிருஸ்து கூறியது போல்,அவர்கள் கழுத்தில் பாறாங்கல்லை கட்டி கடலில் தூக்கி எறிய வேண்டும்.

ஊழல் செய்பவர்கள் எல்லாம் வர்ணப்பூச்சு செய்யப்பட்ட கோபுரத்துக்கு இணையானவர்கள். வெளியில் இருந்து பார்ப்பதற்கு பளபளப்பாக தெரியலாம்.

ஆனால், உள்ளே செத்துப் போன எலும்புகளாகவும்,சிதிலமடைந்தும் தான் அவர்கள் காணப்படுவார்கள்.

ஊழலின் மூலம் தங்களது குடும்பங்களை பராமரிப்பவர்கள் கண்ணியத்தை இழந்தவர்கள். குடும்பத்தாருக்கு அசுத்த உணவை அளிப்பவர்கள்.

ஊழல் என்பது போதைப் பழக்கத்தை போல் கொடியது. ஊழல் செய்யாமல் வாழ முடியாத சூழ்நிலையை அது உருவாக்கி விடும்.

ஊழல் செய்வதன் மூலம் கண்ணியத்தை இழக்கும் இவர்கள், தாங்கள் சம்பாதித்த பணத்தை தங்களுடன் கொண்டு செல்வதில்லை.

கண்ணியத்தை இழந்தவர்கள் என்ற அவப்பெயரை மட்டும்தான் கொண்டு செல்கிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post Top Ad