வரிக்குதிரை கேள்விப்பட்டிருக்கிறோம் அதென்ன வரிக்கழுதை ? - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, November 17, 2013

வரிக்குதிரை கேள்விப்பட்டிருக்கிறோம் அதென்ன வரிக்கழுதை ?


உயிரியல் தத்துவத்துக்கு கோட்பாடுகளை வகுத்து தந்த டார்வின் காலத்தில் இருந்தே உயிரினங்களின் வாழ்க்கை ரகசியம் தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.


அவ்வகையில், பல்வேறு கலப்பின உயிரினங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு கட்டமாக, இத்தாலி நாட்டின் பிளாரன்ஸ் நகரில் ஆண் வரிக்குதிரை மற்றும் பெண் கழுதையின் கலப்பினச் சேர்க்கையின் பலனாக வரிக்கழுதை குட்டி ஒன்று பிறந்துள்ளது.

விலங்கினங்களில் வரிக்குதிரை, கழுதை போன்றவை குதிரை இனத்தின் ஒரு பகுதியாகவே கருதப்படுகிறது. எனினும், உயிர் உற்பத்திக்கு தேவையான 'குரோமோசோம்'களின் எண்ணிக்கையில் ஒவ்வொரு விலங்கினத்திலும் வேறுபாடு உண்டு.

இந்த வேறுபாடுகளை எல்லாம் கடந்து பண்ணையில் வளர்க்கப்பட்டு வந்த ஒரு ஆண் வரிக்குதிரை வேலியை தாண்டி தப்பிச் சென்று, வயலில் மேய்ந்துக்கொண்டிருந்த பெண் கழுதையுடன் இனச் சேர்க்கையில் ஈடுபட்டதன் விளைவாக வரிக்குதிரையின் கால் மற்றும் கழுதையின் முகம் மற்றும் உடலமைப்புடன் இந்த அபூர்வ வரிக்கழுதை பிறந்துள்ளது.

இதற்கு முன்னரும், வரிக்குதிரை - குதிரை, ஆண் கழுதை - பெண் குதிரை போன்றவை கலப்பினச் சேர்க்கையில் ஈடுபட்டு குட்டிகளை ஈன்றுள்ளன.

இருப்பினும், ஆண் வரிக்குதிரையும், பெண் கழுதையும் இணைந்து ஒரு குட்டியை ஏற்படுத்தியது இதுவே முதல் முறை என்று விலங்கியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

No comments:

Post Top Ad