கிண்ணியா பெண்கள் பாடசாலைக்கு அருகில் விருந்தினர் விடுதி அமைக்க கிழக்கு முதலமைச்சர் தடை உத்தரவு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, November 07, 2013

கிண்ணியா பெண்கள் பாடசாலைக்கு அருகில் விருந்தினர் விடுதி அமைக்க கிழக்கு முதலமைச்சர் தடை உத்தரவு


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

உலக வங்கியின் நிதியுதவியில் புறநெகும திட்டத்தினூடாக கிண்ணியா டெலிகொம் இற்கு அருகில் இருக்கும் பழைய ஆஸ்ப்பத்திரி காணி என்றழைக்கப்படும் காணியில் விருந்தினர் விடுதி ஒன்றினை நிறுவுவதற்காக கடந்தவாரம் கிண்ணியா நகர சபையினரால் அடிக்கல் நடப்பட்டது.


உத்தேசிக்கப்பட்ட விருந்தினர் விடுதியானது கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரிக்கு மிக அருகில் அமைந்திருப்பதால்ää மாணவிகளின் கலாச்சாரதுக்கு அது பாதிப்பதாக அமையலாம் என பொதுமக்கள் முதலமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்ததையடுத்து அதனை பொருத்தமான வேறு ஒரு இடத்தில் அமைக்குமாறு கிழக்குமாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் உத்தரவிட்டுள்ளார்.

கிண்ணியா நகர பிதா டாக்டர் ஹில்மி மகரூப்ää கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரி அதிபர் திருமதி. நாதிரா அமீன்பாரி மற்றும் கிண்ணியா ஜம்மியத்துல் உலமா சபையினர் ஆகியோரை நேரில் அழைத்த முதலமைச்சர்ää அவ்விருந்தினர் விடுதியானது மகளிர் கல்லூரிக்கு அருகில் அமைவதால் ஏற்படும் பாதகமான சு10ழ்நிலையை விளக்கியதுடன்ää குறித்த விருந்தினர் விடுதியின் நிர்மாணப்பணிகளை உடனடியாக நிறுத்துமாறு நகரபிதாவுக்கு உத்தரவிட்டுள்ளர்.

அத்தோடு குறித்த காணியில் கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரிக்கான பாடசாலைக் கட்டிடம் ஒன்றினை தான் அமைத்துதருவதாகவும் கூறினார்.

No comments:

Post Top Ad