புலம்பெயர்ந்து சென்ற பெண்களின் குழந்தைகளுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு-(படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, November 07, 2013

புலம்பெயர்ந்து சென்ற பெண்களின் குழந்தைகளுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு-(படங்கள் இணைப்பு)


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு கரித்தாஸ் எகெட் நிறுவகத்தினால் முன்னெடுக்கப்படும் பாதுகாப்பான புலம்பெயர்தலும் மனித வியாபாரத்தை தடுத்தலும் செயற்றிட்டத்தின் கீழ் மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில் நிமித்தமாக புலம்பெயர்ந்து சென்ற பெண்களின் குழந்தைகளுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 06-11-2013 நேற்று புதன்கிழமை நாவற்கேணி கண்ணகி பாலர் பாடசாலையில் இடம்பெற்றது.


சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கான இவ் உபகரணங்களை பாதுகாப்பான புலம்பெயர்தலும் மனித வியாபாரத்தை தடுத்தலும் செயற்றிட்டத்தின் திட்ட பொறுப்பாளர் செல்வி க.திசாந்திää நிறுவக ஊடகப்பிரிவு பொறுப்பாளர் ச.மைக்கல்ää ஊக்குவிப்பாளர் சி. பூஜா ஆகியோரால் வழங்கி வைக்கப்பட்டதுடன்

மட்-நாவற்கேணி ஸ்ரீ கண்ணகி பாலர் பாடசாலை மற்றும் கருவேப்பங்கேணி விபுலானந்தா வித்தியாலயம் ஆகிய இரு பாடசாலைகளுக்கும் தரம் 01 முதல் தரம் 11 வரையான அனைத்து பாடங்களுக்குமான நாற்பத்தையாயிரம் ரூபா பெறுமதியான வினாவிடை புத்தகங்கள் நிறுவக இயக்குனர் அருட்பணி. கிறைட்டன் அவுட்ஸ்கோன் அடிகளாரால் அதிபர்களிடம் கையளிக்கப்பட்டது.

No comments:

Post Top Ad