தேரருக்கு எதிராக டயர்கள் எரித்து போராட்டம் (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, November 29, 2013

தேரருக்கு எதிராக டயர்கள் எரித்து போராட்டம் (படங்கள் இணைப்பு)


மட்டக்களப்பு, பட்டிப்பளை பிரதேச செயலாளரை அச்சுறுத்திய அம்பிட்டிய சுமணரத்ன தேரர் பிரதேச செயலக வீதியில் இன்று வெள்ளிக்கிழமை நடமாடியதனால் அப்பிரதேசத்தில் பதற்றமான நிலை ஏற்பட்டது.
பொலிஸ் நிலையத்திற்கு வந்த தேரரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் ஒன்று கூடி எதிர்ப்புக் காட்டியதுடன், வீதியில் டயர்களை போட்டு எரித்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதனையடுத்து பொலிஸ் நிலையத்திற்கு வந்த சுமணரத்ன தேரர் மட்டக்களப்புக்குச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. தேரரை பொலிஸார் தங்களுடைய வாகனத்தில் இராணுவத்தினரின் பாதுகாப்புடன் மண்முனைத் துறை வரை கொண்டு சென்று விட்டனர்.
இதே நேரம், இன்றும் பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் நடவடிக்கைகள் மந்த கதியில் நடைபெற்று வருகின்றது.
மட்டக்களப்பு ,  பட்டிப்பளை பிரதேச செயலகத்தினுள் கடந்த புதன்கிழமை பகல் புகுந்த மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் பிரதேச செயலாளரின் அலுவலக சாதனங்களைச் சேதப்படுத்தியிருந்ததுடன், பிரதேச செயலாளரையும் அச்சுறுத்தியிருந்ததாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதனையடுத்து பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், பகிஸ்கரிப்பிலும் ஈடுபட்டிருந்தனர். அத்துடன் நேற்றைய தினம் பொது மக்களும் பிரதேச செயலகம் முன்பாகப் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அதே நேரம் பட்டிப்பளை,  கொக்கட்டிச்சோலை பொலிஸார் ஊடாக களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றத்தில் தேரர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை நீதிமன்றம் 50 ஆயிரம் ரூபா சரீரப்பிணையில் விடுவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.No comments:

Post Top Ad