சிறுவர்களும் இளைஞர்களும் பெறுமதியான சந்தர்ப்பங்களை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும் ; ஜனாதிபதி - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, November 10, 2013

சிறுவர்களும் இளைஞர்களும் பெறுமதியான சந்தர்ப்பங்களை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும் ; ஜனாதிபதி


சிறுவர்களும் இளைஞர்களும் பெறுமதியான சந்தர்ப்பங்களைத் தவறவிடக்கூடாது என்றும் அவற்றை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.


பொதுநலவாய இளைஞர் மாநாடு அம்பாந்தோட்டையிலுள்ள  சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (10) கோலாகலமாக ஆரம்பமாகியது. இந்த மாநாட்டின்  
ஆரம்ப வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பொதுநலவாய நாடுகளின் செயலாளர் கமலேஷ் சர்மா ஆகியோர் இம் மாநாட்டில் விஷேட அதிதிகளாக கலந்து கொண்டனர்


இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப் பெரும இம் மாநாட்டில் வரவேற்புரை நிகழ்த்தினார்.இம் மாநாட்டில் பெறப்படும் படிப்பினைகள் மற்றும் எடுக்கப்படும் தீர்மானங்கள் போன்றவற்றை இளைஞர் சமூகம் எதிர்காலத்தல் செயற்படுத்த வேண்டுமென கேட்டுக் கொண்டார்.


30 வருட யுத்தத்தின் பின் இலங்கையின் தேசியத்தை கட்டியெழுப்பும் முயற்சியில் அரசாங்கம் செயற்படுவதாகவும் குறிப்பிட்டார்.


கமலேஷ் சர்மா இங்கு உரையாற்றுகையில் சமூகத்தின் எதிர்கால அபிவிருத்திற்காக இளைஞர்களும் பங்களிப்புச் செய்ய இதுவொரு சிறந்த தருணம் என குறிப்பிட்டார்.


இளைஞர் சேவை மன்ற கலாசார நிகழ்ச்சிகளும் இம் மாநாட்டு நிகழ்ச்சிகளை மேலும் அலங்கரித்தன. இம் மாநாட்டின் ஆரம்ப ;நிகழ்வுகள் அனைத்தும் மிகவும் கண்கவர் விதத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post Top Ad