அமெரிக்காவில் பலத்த மழை ! விமான சேவை ,தரைவழி போக்குவரத்து பாதிப்பு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, November 29, 2013

அமெரிக்காவில் பலத்த மழை ! விமான சேவை ,தரைவழி போக்குவரத்து பாதிப்பு


அமெரிக்காவில் புயல் சின்னம் காரணமாக தென்கிழக்கு, வடகிழக்கு மற்றும் மத்திய அட்லாண்டிக் பகுதியில் பலத்த மழையும், சில இடங்களில் கடும் பனியும் கொட்டியது.


இதனால் விமான சேவை, தரைவழி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேற்கு பென்சில்வேனியா, நியூயார்க், வெர்மான்ட் பகுதியில் சுமார் 1 அடி (30.5 சென்டி மீட்டர்) பனி கொட்டியது. இதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை 2 நாளாக முடங்கியது.

தற்போது தாத்தா, பாட்டி மற்றும் நெருங்கிய உறவினர்களை சந்தித்து நன்றி தெரிவிக்கும் (தேங்ஸ்கிவ்விங்) பயணங்களை அமெரிக்கர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த வாரத்தில் சுமார் 4 கோடியே 30 லட்சம் பேர் பயணம் மேற்கொள்கிறார்கள். இந்த மழை, பனிப்பொழிவால் இவர்கள் குறித்த காலத்தில் செல்ல முடியாமல் தவிக்கிறார்கள்.

No comments:

Post Top Ad