ஈரானியருடன் தொடர்பு பிலிப்பைன்ஸ் காதலி இலங்கையரால் தாக்குதல் குவைத்தில் சம்பவம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, November 10, 2013

ஈரானியருடன் தொடர்பு பிலிப்பைன்ஸ் காதலி இலங்கையரால் தாக்குதல் குவைத்தில் சம்பவம்


குவைத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த காதலியை தாக்கிய இலங்கை ஊழியரை கைது செய்ய அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த காதலில், ஈரானியர் ஒருவருடன் தொடர்புகளை ஏற்படுத்தி கொண்டதால் கோபம் கொண்ட இலங்கை பிரஜை அந்த பெண் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
இலங்கை பிரஜை தனது காதலியை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். அது தோல்வியடையவே அந்த பெண் தங்கியிருக்கும் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அங்கிருந்த ஈரானிய பிரஜை இருப்பதை கண்ட இலங்கை பிரஜை, காதலியையும், ஈரானியரையும் தாக்கியுள்ளார்.
இதனையடுத்து அவர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். பொலிஸார் அங்கு செல்லும் போது இலங்கை பிரஜை அங்கிருந்து தப்பிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.
சம்பவத்தில் காயமடைந்த பிலிப்பைன்ஸ் பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இலங்கை பிரஜையுடனான தனது தொடர்புகளை 20 நாட்களுக்கு முன்னர் துண்டித்து கொண்டதாக பிலிப்பைன்ஸ் பெண் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

No comments:

Post Top Ad