புலிகளின் தலைவர் பிரபாகரனின் உதவியாளருக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, November 07, 2013

புலிகளின் தலைவர் பிரபாகரனின் உதவியாளருக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை


(tm)
புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தனிப்பட்ட உதவியாளராக பணி புரிந்ததாக கூறப்படும் ஒருவருக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


தனபாலசிங்கம் லிங்கதாசன் என்பவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை சிறைத் தண்டனையை விதித்து தீர்ப்பளித்தது.

இந்த நபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி குமுதினி விக்ரமசிங்க, இரண்டு வருட சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

இவர் புலிகள் அமைப்பில் உறுப்பினராக இருந்து, துப்பாக்கி சுடும் பயிற்சி மற்றும் இராணுவ தந்திரோபாயங்கள் பற்றிய பயிற்சிகளை பெற்றவர் என நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது.  இந்த குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொண்ட அவருக்கு நீதிபதி இந்த தண்டனையை வழங்கினார்.

No comments:

Post Top Ad