புகைத்தல் மூலம் மறைக்கப்படும் உண்மைகள் (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, November 07, 2013

புகைத்தல் மூலம் மறைக்கப்படும் உண்மைகள் (படங்கள் இணைப்பு)


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

புகைத்தல் மூலம் மறைக்கப்படும் உண்மைகள் எனும் தொனிப்பொருளில் பாடசாலை ரீதியாக மாணவர்கள் மத்தியில் சமூக கலாசார சீர்கேடுகளை சுகாதார ரீதியாக விழிப்பூட்டும் ஆரம்ப நிகழ்வு மட்டு-காத்தான்குடியில்

ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் காத்தான்குடி கிளை கொழும்பு (எடிக்)  புகைத்தல் மற்றும் போதைப் பொருள்; தகவல் நிலையத்துடன் இணைந்து புகைத்தல் மூலம் மறைக்கப்படும் உண்மைகள் எனும் தொனிப்பொருளில் பாடசாலை ரீதியாக மாணவர்கள் மத்தியில் சமூக கலாசார சீர்கேடுகளை சுகாதார ரீதியாக விழிப்பூட்டும் ஆரம்ப நிகழ்வு இன்று 07-11-2013 வியாழக்கிழமை மட்டக்களப்பு-காத்தான்குடி ஸாவியா வித்தியாலயத்தில் ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் காத்தான்குடி கிளையின் தலைவர் இஸட்.எம்.சஜி தலைமையில் இடம்பெற்றது.


இதன் போது போதைப் பொருளுக்கு அடிமையாகுவதால் ஏற்படும் விபரீதங்கள்ääபோதைப் பொருளிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள்ääபோதைப் பொருளால் குடும்பவியல் ரீதியாக ஏற்படும் பாதிப்புக்கள் போன்ற விடயங்கள் தொடர்பாக மாணவர்களுக்கு விரிவாக தெளிவுபடுத்தப்பட்டது.

இங்கு மாணவர்கள் மத்தியில் சமூக கலாசார சீர்கேடுகளை சுகாதார ரீதியாக எவ்வாறு விழிப்பூட்டுவது எனும் தலைப்பில் விரிவுரைகளை கொழும்பு (எடிக்)  புகைத்தல் மற்றும் போதைப் பொருள்; தகவல் நிலையத்தின் விரிவுரையாளர்  ஜெஸீல் மஃறூப் நிகழ்த்தினார்.

பாடசாலை ரீதியாக மாணவர்கள் மத்தியில் சமூக கலாசார சீர்கேடுகளை சுகாதார ரீதியாக விழிப்பூட்டும் ஆரம்ப நிகழ்வு இன்று வியாழக்கிழமை காத்தான்குடி பிரதேசத்தில் காத்தான்குடி ஸாவியா வித்தியாலயம்ääகாத்தான்குடி அல் அமீன் வித்தியாலயம்ääகாத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை ஆகியவற்றில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
 
இந்நிகழ்வில் காத்தான்குடி ஸாவியா வித்தியாலய அதிபர் திருமதி .நயீமா ääஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் காத்தான்குடி கிளையின் தலைவர் இஸட்.எம்.சஜி ääஆசிரிய ஆசிரியர்கள்ääமாணவ மாணவிகள்ää ääஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments:

Post Top Ad