இளைஞர் பேரவையின் உப தலைவர் பதவிக்காக இலங்கையின் சதாம் சாஜஹான், மொஹமட் நுஸ்தி - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, November 13, 2013

இளைஞர் பேரவையின் உப தலைவர் பதவிக்காக இலங்கையின் சதாம் சாஜஹான், மொஹமட் நுஸ்தி

(nf)
பொதுநலவாய இளைஞர் பேரவையின் தலைமைத்துவம் நைஜீரியாவின் அஹமட் அடாமிற்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
இளைஞர் பேரவைக்காக தெரிவு செய்யப்பட்ட நிறைவேற்றுக் குழுவில் 9 பேர் அடங்குவதுடன் அவர்களுள் நான்கு பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பேரவையின் உப தலைவர் பதவிக்காக இலங்கையின் சதாம் சாஜஹான், மொஹமட் நுஸ்தி மற்றும் இந்தியாவின் சுதர்ஷனா லக்ஷ்மி ஆகியோர் மூன்று பிரிவுகளின் கீழ் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அஹமட் அடாமிற்கு தெரிவித்த கருத்து -
"இந்த வெற்றி விசேடமானதொன்றாகும். பொதுநலவாய இளைஞர் வரலாற்றின் சிறந்த எடுத்துக் காட்டாகும். 2 வருடங்களுக்குள் அதிகபட்ச சேவையை வழங்க எதிர்பார்த்துள்ளேன். இது இலகுவான விடயமொன்று அல்ல. எனினும் பொதுநலவாய இளைஞர்களிடம் இருந்து அதிகபட்ச ஒத்துழைப்பை நான் எதிர்பார்க்கின்றேன்"
சதாம் சாஜஹான் இவ்வாறு கருத்து தெரிவித்தார் -
"இலங்கை அரசாங்கம் மற்றும் இளைஞர் விவகார அமைச்சுக்கு நான் முதலாவதாக நன்றிகளை தெரிவுத்துக் கொள்கிறேன். இவ்வாறானதொரு வெற்றிகரமான இளைஞர் மாநாடொன்றை ஹம்பாந்தோட்டையில் நடத்துகின்றமை தொடர்பில் நன்றி தெரிவிக்கின்றேன்"

எஸ். லக்ஸ்மி கருத்து தெரிவித்தார் -
"இது அனைவருக்கும் விசேடமானதொரு சந்தர்ப்பமாகும். இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தக் கிடைத்தமை தொடர்பில் பெருமையடைகிறேன்.பொதுநலவாய நாடுகளில் இந்தியாவின் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாகும்"
 

No comments:

Post Top Ad