கெலம் மக்கரேக்கு விசா வழங்கியமை அரசாங்கம் செய்த மிகப்பெரிய தவறு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, November 08, 2013

கெலம் மக்கரேக்கு விசா வழங்கியமை அரசாங்கம் செய்த மிகப்பெரிய தவறு

(vi)
செனல் - 4 தொலைக்காட்சியின் கெலம் மக்கரேக்கு இலங்கைக்கு வருவதற்கு விசா வழங்கியமை அரசாங்கம் செய்த மிகப்பெரிய தவறாகும். இதனை எதிர்க்கின்றோம். மெக்கரே அத்து மீறி செயற்பட்டால் உடனடியாக அவர் நாடு கடத்தப்பட வேண்டும் என்றும் சேதப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்தார்.

இந்தியப் பிரதமர் யாழ்ப்பாணம் சென்றால் அது இலங்கைக்கு எதிரான செயற்பாடுகளுக்கு வலு சேர்ப்பதாகவே அமையும் எனவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக டாக்டர் வசந்த பண்டார மேலும் தெரிவிக்கையில்,

செனல் 4 தொலைக்காட்சியின் கெலம் மக்கரே இலங்கைக்கு எதிரான செய்திகளையே வெளியிட்டு எமது நாட்டை அகௌரவப்படுத்தியவர். அண்மையிலும் சோடித்த தகவல்களுடன் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதாக சித்திரிக்கும் செய்திப் படமொன்றை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்தார். அவ்வாறான ஒருவருக்கு விசா வழங்கியமை அரசு செய்த பெரிய பிழையாகும்.

நாடுகளுடன் மோதல்களை ஏற்படுத்திக்கொள்ளாது ராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்ள வேண்டுமென்ற முட்டாள்தனமான ஆலோசகர்களின் வழிநடத்தல் காரணமாகவே அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

கெலம் மெக்கரேக்கு விசா வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் எங்கு செய்திகளை சேகரிக்க சென்றாலும் அரசாங்கத்தின் அனுமதியுடனே செல்ல வேண்டும். அதனை மீறி தன்னிச்சையாக செயற்பட முடியாது.

அது மட்டுமல்லாது நாட்டுக்கு எதிரான கருத்துக்களையும் வெளியிட முடியாது. இவ்வாறு கருத்துக்களை வெளியிட்டால் உடனடியாக மெக்ரோவையையும் குழுவினரையும் நாடு கடத்த வேண்டும். இல்லா விட்டால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்போம்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு தமிழ் நாட்டு மக்களை ஆசுவாசப்படுத்துவதோடு மாநாட்டில் கலந்து கொண்டு இலங்கை அரசாங்கத்தை சமாதானப்படுத்தும் போக்கை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் பின்பற்றுகிறார்.

அதாவது ஒரே கல்லில் 2 மாங்காய்களை வீழ்த்தும் முயற்சியில் சிங் இறங்கியுள்ளார்.

அது மட்டுமல்லாது சிங்கின் யாழ். விஜயம் இலங்கைக்கு எதிரானதாகவே அமையப் போகின்றது என்றார்.

No comments:

Post Top Ad