மக்ரே மனம் மாறுவாராம் கெஹலியவின் நம்பிக்கை - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, November 10, 2013

மக்ரே மனம் மாறுவாராம் கெஹலியவின் நம்பிக்கை


செனல்4 ஊடகத்தின் பணிப்பாளர் கலம் மக்ரேவின் இலங்கை குறித்த நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படும் என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.


மக்ரே இலங்கைக்கு விஜயம் செய்ததன் பின்னர் இலங்கை தொடர்பான அவரது நிலைப்பாட்டில் மாற்றம் உண்டாகும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனின் ஊடகவியலாளர் குழுவுடன் மக்ரே இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.


மக்ரேயுடன் மொத்தமாக 30 ஊடகவியலாளர்கள் பிரித்தானியாவின் சார்பில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பங்கேற்க உள்ளனர். கலம் மக்ரேக்கு வீசா வழங்குவதில் இலங்கைக்கு எவ்வித சிக்கல்களும் கிடையாது என அமைச்சர் ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.


இலங்கைக்கு விஜயம் செய்து நிலைமைகளை நேரில் பார்வையிட்டு நாடு குறித்த புரிதலை ஏற்படுத்திக் கொள்வார் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.


எவ்வாறெனினும்- இலங்கைக்கு எதிராக மற்றுமொரு ஆவணப்படத்தை தயாரிக்க செனல்4 ஊடகம்- பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொள்ளக் கூடுமென அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.


அவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் அதனை முறியடிக்கத் தயார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post Top Ad