அக்கரைப்பற்றில் தாய் ஒருவர் வீதியில் குழந்தையை பிரசவித்தனால் பரபரப்பு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, November 08, 2013

அக்கரைப்பற்றில் தாய் ஒருவர் வீதியில் குழந்தையை பிரசவித்தனால் பரபரப்பு


அக்கரைப்பற்றில் கர்ப்பிணி ஒருவர் வீதியில் குழந்தையை பிரசவித்துள்ளார். இந்தச் சம்பவம் இப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அக்கரைப்பற்றில் நேற்று முன்தினம் பிற்பகல் 2.30 மணியளவில் குறித்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக தெரிய வருகின்றது. குறிப்பிட்ட பெண் வீதியால் சென்று கொண்டிருந்த வேளை, திடீரென பிரசவ வலியினால் வீதியோரத்தில் பிரசவித்துள்ளார். பின் அவ்விடத்தில் இருந்தவர்களுடைய உதவியுடன் பிரசவித்த குழந்தையும் தாயும் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். குறித்த பெண் மிகவும் வறுமையான குடும்பத்தைச் சேர்ந்தவரென்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post Top Ad